புவி சுற்றுப் பாதையில் இருந்து நாளை விடுவிக்கப்படுகிறது ஆதித்யா எல்1 - இனி சூரியனை நோக்கி ஆதித்யா எல்1 பயணமாகும் என இஸ்ரோ தகவல்
Sep 18 2023 10:08AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆதித்யா எல்-1 விண்கலம் புவி சுற்றுப் பாதையிலிருந்து நாளை விடுவிக்கப்பட்டு சூரியனை நோக்கி பயணிக்க உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த 2-ம் தேதி ஆதித்யா எல்-1 விண்ணில் செலுத்தப்பட்டு புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. தொடா்ந்து, பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப்பாதையை நீட்டிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதன்படி, இதுவரை 4 முறை சுற்றுப்பாதை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது 1 லட்சத்து 21 ஆயிரத்து 973 கிலோ மீட்டர் தொலைவு சுற்றுப்பாதையில் விண்கலம் பயணித்து வரும் நிலையில் நாளை புவி சுற்றுப்பாதையில் இருந்து விலகி சூரியனை நோக்கி பயணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.