ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தீ விபத்து.... நிறுத்திவைக்கப்பட்டிருந்த 60க்கும் மேற்பட்ட படகுகள் தீயில் கருகி சேதம்
Nov 20 2023 1:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 60க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் எரிந்து நாசமாகின.
படகுகளில் டீசல், சமையலுக்கு பயன்படுத்த எரிவாயு சிலிண்டர்கள் இருந்ததன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. படகுகளில் இருந்த எரிவாயு சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விசாகப்பட்டினத்திலிருந்து 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்டநேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். நள்ளிரவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.