தெலங்கானா தேர்தல்: தீவிர வாக்கு சேகரிப்பில் திருநங்கை வேட்பாளர்
Nov 20 2023 2:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானா மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த திருநங்கை வேட்பாளர் ஒருவர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
தெலங்கானாவில் சட்டமன்ற தேர்தல் வரும் 30 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பி.ஆர்.எஸ், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதனால், அங்கு அனல் பறக்கும் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியும் பிஆர்.எஸ் கட்சியும் ஈடுபட்டுள்ளன. இந்தநிலையில், வாரங்கல் கிழக்கு சட்டசபை தொகுதியில், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருநங்கையான புஷ்பிதாலயா போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.