உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் சுரங்க இடிபாடுகளில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களின் முதல் புகைப்படம் வெளியானது : குழாய் மூலமாக வாக்கி டாக்கியை அனுப்பி தொடர்பு கொள்ள முயற்சி

Nov 21 2023 9:01AM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப் இடிபாடுகளில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களின் முதல் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

உத்தரகாசியில் யமுனோத்ரியை இணைக்கும் வகையில் மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. கடந்த 12ம் தேதி மலையை குடையும்போது, சுரங்கத்தின் ஒரு பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அங்கிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்குத்திற்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் அதிகாரிகள் 10 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு முதல்முறையாக நேற்று குழாய் மூலம் உணவுகள் மற்றும் மருந்து பொருட்கள் அனுப்பப்பட்டன. இதனிடையே சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. குழாய் மூலம் அனுப்பப்பட்ட எண்டோஸ்கோபிக் ஃப்ளெக்ஸி கேமரா மூலம் இந்த காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களை வாக்கி-டாக்கி மூலம் தொடர்புகொள்ளும் முயற்சியில் மீட்புப் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களை மீட்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00