சென்னையில் விமான பயணிகள் 6 பேரை நூதன முறையில் ஏமாற்றிய இண்டியோ விமானம்
Nov 21 2023 2:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் விமான பயணிகள் 6 பேரை இண்டியோ விமானம் நூதன முறையில் ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிறன்று இரவு ஒன்பது முப்பது மணியளவில் அமிர்தசரசில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானம் பெங்களூரு வழியாக வந்தது. விமானம் பெங்களூருவுக்கு வந்தவுடன் பெங்களூருவை சேர்ந்த பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கியதும் சென்னைக்கு செல்ல வேண்டிய 6 பயணிகள் மட்டுமே விமானத்தில் இருந்துள்ளனர். 6 பேருக்காக விமானத்தை சென்னைக்கு இயக்க விரும்பாத இண்டிகோ நிறுவனம் 6 பயணிகளையும் செல்போனில் தொடர்பு கொண்டு சென்னைக்கு செல்லும் மாற்று விமானம் புறப்பட தயாராக உள்ளதாகவும், 6 பேரையும் விமானத்தில் இருந்து இறங்கி இண்டிகோ சேவை மையத்துக்கு வருமாறும் தெரிவித்துள்ளது. அங்கு வந்த 6 பேரிடமும் ஓட்டலில் தங்குமாறு கூறிய இண்டிகோ ஊழியர் ஒருவர், மறுநாள் தான் மாற்று விமானம் புறப்படும் என ஏமாற்றியதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.