மகாராஷ்டிராவில் டைகர் 3 திரைப்படத்தின்போது திரையரங்கில் பட்டாசு வெடித்த சம்பவம் : 3 பேரை கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை
Nov 21 2023 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாலிவுட் நடிகர் சல்மான்கானின் டைகர் 3 திரைப்படத்தின்போது திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனீஷ் ஷர்மா இயக்கத்தில் சல்மான் கான் நடித்த டைகர் 3 திரைப்படம் கடந்த 12ம் தேதி வெளியானது. இந்த படம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டபோது, சல்மான்கானின் ரசிகர்கள் திரையரங்கிற்குள் பட்டாசுகளை கொளுத்தினர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.