குடும்பத் தலைவி பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைய ஆண்டுக்கு ரூ.10,000 : ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி
Nov 21 2023 6:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜஸ்தான் மாநிலத்தில் சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அதிரடியான தோ்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 200 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு 25ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், நாளைய மறுதினம் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. குடும்பத் தலைவி பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையும் வகையில் ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய், உரங்கள் மற்றும் விவசாயத் துறையை அதிகரிக்கும் வகையில் மாட்டுச் சாணம் கிலோ இரண்டு ரூபாய்க்கு கொள்முதல் உள்ளிட்ட 7 முதன்மையான வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது.