மணிஸ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டிப்பு : மதுபான புதிய கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் சிறையிலடைப்பு
Nov 21 2023 6:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான புதிய கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியா திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சிசோடியா மீதான நீதிமன்ற விசாரணை காவல் நாளையுடன் நிறைவடைகிறது. இந்தசூழலில் மணிஸ் சிசோடியா இன்று மீண்டும் டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவரது காவலை டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.