உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து... மீட்புக்குழுவினரின் துணிச்சலும், உறுதியும்தான் தொழிலாளர்களுக்கு புதுவாழ்வு அளித்துள்ளதாக நெகிழ்ச்சி

Nov 29 2023 8:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் 17 நாட்கள் போராட்டுத்துக்குபின் மீட்கப்பட்டுள்ளதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், தொழிலாளர்களின் மன உறுதிக்கு தேசம் தலைவணங்குவதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 17 நாட்களாக தொழிலாளர்கள் சந்தித்த தடைகள் மனித சகிப்புத் தன்மைக்குச் சான்றாகும் என்றும், நம்பமுடியாத மனஉறுதியுடன் செயல்பட்ட மீட்புக்குழுவினர், நிபுணர்களை வாழ்த்துவதாகவும் குடியரசுத் தலைவர் முர்மு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மீட்புப் பணியின் வெற்றி, அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைப்பதாகவும், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை சந்திக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சில்க்யாரா சுரங்கப்பாதையில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். மீட்கப்பட்ட பிறகு மருத்துவக் கண்காணிப்பில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்களின் உடல்நலன் குறித்து பிரதமர் மோடி விசாரித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில், உத்தரகாசியில் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த நமது 41 சகோதரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டது நாட்டுக்கு பெரும் செய்தி என்றும், நீண்ட காலமாக சுரங்கப்பாதையில் இத்தகைய சவாலான சூழ்நிலையை எதிர்கொண்ட அவர்களின் துணிச்சலுக்கு தேசம் வணக்கம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

மத்திய சாலை போக்‍குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட வாழ்த்துசெய்தியில், சில்க்யாரா சுரங்கத்தில் இருந்து 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டது மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடி, உத்தரகாண்ட் முதலமைச்சருக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நன்றி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், உத்தரகாசியின் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர் சகோதரர்கள் பத்திரமாகத் திரும்பியது மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்றும், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார். இந்தியாவைக் கட்டமைக்கும் நமது தொழிலாளர் சகோதரர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்றும் இந்த கடினமான போராட்டத்தை வெற்றிகரமாக்கிய அனைத்து துணிச்சலான மனிதர்களையும் தாம் வணங்குவதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், சவாலான பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மீட்புப்பணிகள் அனைத்தும் துரிதமாக நடந்து முடிந்துள்ளது என்றும் இயந்திரங்கள் பழுதான சூழலிலும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில் உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டதில் நாடு மகிழ்ச்சி கொள்வதாகவும் அயராது செயல்பட்ட மீட்புக் குழுவால் பெருமை கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதே போன்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ​புதுச்சேரி ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட பல தலைவர்களும், 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00