நெருப்பைக் கொண்டு வரையப்பட்ட மிக நீளமான ஓவியம் - குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஓவியர் சாதனை

Feb 23 2017 2:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ஓவியர் ஒருவர், நெருப்பைக் கொண்டு மிக நீளமான ஓவியத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் வசித்து வரும் கமல் ராணா என்ற ஓவியர், புதிய உத்திகளை கையாண்டு ஓவியங்களை தீட்டுவதில் ஆர்வம் கொண்டவர். தீ ஜுவாலைகளை பயன்படுத்தி அவர் வரைந்த ஓவியங்கள் புகழ்பெற்றவையாகும். இதே முறையில் உலகின் மிக நீளமான ஓவியத்தை வரையும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். இதற்காக சுமார் 10 மாத காலம் கடும் பயிற்சி மேற்கொண்டார். வதோதரா நகரில் நேற்று நடைபெற்ற சாதனை நிகழ்ச்சியில் அவர் மிக நீளமான நெருப்பு ஓவியத்தை தீட்டினார். சச்சின் டெண்டுல்கர், தோனி, ஸ்டீவ் ஸ்மித், கிறிஸ் கெயில் போன்ற புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களின் உருவங்களையும் அவர் வரைந்தார். இந்த வீரர்கள் வெளிப்படுத்தும் முகபாவங்களையும், உடலசைவுகளையும் மிகவும் தத்ரூபமாக அவர் வரைந்துள்ளார். இந்த சாதனை ஓவியம், வதோதராவில் உள்ள வணிக வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு குவிந்த ஏராளமான பொதுமக்கள் ஓவியத்தை கண்டு மகிழ்ந்து செல்போனில் படம்பிடித்துக் கொண்டனர். இந்த ஓவியம் மும்பை, சூரத், டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா போன்ற பல்வேறு நகரங்களில் காட்சிப்படுத்தப்பட இருப்பதாக ஓவியர் கமல்ராணா தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00