டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை கழக எம்.பி.க்கள் நேரில் சந்தித்து ஆதரவு - விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி

Mar 20 2017 4:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்போவதாக, அவர்களை சந்தித்த டாக்டர் மு. தம்பிதுரை தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. எம்.பிக்கள் உறுதியளித்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள், இன்று 7-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை, மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் மு. தம்பிதுரை தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் மு. தம்பிதுரை, விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய நிதியமைச்சர் மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆகியோரிடம் தெரிவிக்க உள்ளதாக குறிப்பிட்டார். முன்னதாக, விவசாயிகளின் சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர், திரு.அய்யாக்கண்ணு, விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00