மணிப்பூர் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு : 33 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவோடு Biren Singh தலைமையிலான பாரதிய ஜனதா அரசு வெற்றி - மணிப்பூரில் முதன்முதலாய் ஆட்சி பீடத்தில் அமர்ந்தது பாரதிய ஜனதா

Mar 20 2017 3:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
மணிப்பூர் சட்டப் பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், Biren Singh தலைமையிலான பாரதிய ஜனதா அரசு 33 சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் வெற்றிபெற்றது.

மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும், பாரதிய ஜனதா 21 இடங்களிலும் வெற்றி பெற்றது. தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி ஆகியவை பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு அளித்ததால், அதன்பலம் 33 ஆக உயர்ந்தது. இதனையடுத்து, திரு.Biren Singh பாரதிய ஜனதா கட்சியின் சட்டசபைக் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டு, அவர், கடந்த 15-ம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார். தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த திரு.ஜாய்குமார் துணை முதலமைச்சராகவும்பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி, தங்களது சட்டமன்ற உறுப்பினர்களை கவுகாத்தியிலும், காங்கிரஸ் கட்சி தங்களது சட்டமன்ற உறுப்பினர்களை இம்பாலிலும் தங்க வைத்திருந்தது. ஆட்சி அமைப்பதற்கு 31 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், ஆளுநர் திருமதி. நஜ்மா ஹெப்துல்லா அறிவுறுத்தலின்பேரில், இன்று, சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், Biren Singh தலைமையிலான பாரதிய ஜனதா அரசு 33 சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரவு பெற்று வெற்றிபெற்றது.

இதன்மூலம், பாரதிய ஜனதா கட்சி மணிப்பூர் மாநிலத்தில் முதன்முதலில் ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடதக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2783.00 Rs. 2976.00
மும்பை Rs. 2803.00 Rs. 2968.00
டெல்லி Rs. 2816.00 Rs. 2982.00
கொல்கத்தா Rs. 2815.00 Rs. 2979.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.60 Rs. 41600.00
மும்பை Rs. 41.60 Rs. 41600.00
டெல்லி Rs. 41.60 Rs. 41600.00
கொல்கத்தா Rs. 41.60 Rs. 41600.00