ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சியான கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாய் சட்டவிரோதமாக கைமாறிய வழக்கு : சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது

Mar 20 2017 3:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சியான கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாய் சட்டவிரோதமாக கைமாறிய வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.

முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா, தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, ஸ்பெக்ட்ரம் உரிமங்களை தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக வழங்கியதில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இவ்வழக்கில் ஆ.ராசா, கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் நிபந்தனை ஜாமீனில் பின்னர் வெளியே வந்தனர்.

இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தரப்பு வாதங்கள் ஏற்கனவே முடிவடைந்து விட்டன. இவ்வழக்கு தொடர்பாக கூடுதல் தகவல்கள் கிடைத்திருப்பதால், மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பு கோரியதைத் தொடர்ந்து, கூடுதல் இறுதி வாதம் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கி, கடந்த வெள்ளிக்கிழமை நிறைவுற்றது.

இதனிடையே, கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சியான கலைஞர் டி.வி.க்கு, ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில், 214 கோடி ரூபாய் சட்டவிரோதமாக கைமாறியது தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை, இன்று, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 15:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

  • REEL PETTI - Jaya Plus

    Sun,Sat : 16:30

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3003.00 Rs. 3212.00
மும்பை Rs. 3025.00 Rs. 3203.00
டெல்லி Rs. 3037.00 Rs. 3217.00
கொல்கத்தா Rs. 3038.00 Rs. 3215.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.50 Rs. 42500.00
மும்பை Rs. 42.50 Rs. 42500.00
டெல்லி Rs. 42.50 Rs. 42500.00
கொல்கத்தா Rs. 42.50 Rs. 42500.00