உத்தரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சிக்கு புதிய பா.ஜ.க. அரசு தடை : லக்னோ வன உயிரின காப்பகத்தில் விலங்குகளுக்கு கோழியை உணவாகக் கொடுக்கும் பரிதாப நிலை

Mar 24 2017 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேசத்தில் புதிய பா.ஜ.க. அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்துள்ளதால், லக்னோ வன உயிரின காப்பகத்தில் சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கு கோழியை உணவாகக் கொடுக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் அனுமதி இல்லாமல் இயங்கும் ஏராளமான மாட்டிறைச்சி கடைகளுக்கு புதிதாக பதவி ஏற்றுள்ள பாஜக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் லக்னோவில் உள்ள புகழ்பெற்ற விலங்குகள் காப்பகத்தில் ஏராளமான சிங்கம் மற்றும் புலி ஆகிய விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இங்குள்ள விலங்குகளுக்கு இறைச்சிக்கு பதிலாக கோழிகள் உணவாக வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், அதிக அளவில் இறைச்சி உட்கொள்ளும் சிங்கம், புலி போன்ற விலங்குகள், போதிள உணவு கிடைக்காமல் உடல் இளைத்து வருகின்றன. மேலும், இதே நிலை நீடித்தால், அந்த விலங்குகள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால், உயிரியல் பூங்கா நிர்வாகிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படுவதற்கு முன்பு இப்பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு தினமும் 235 கிலோ இறைச்சி உணவாக வழங்கப்பட்டு வந்தது. இது தற்போது மிகவும் குறைந்து 80 கிலோ மட்டுமே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00