ஏர் இந்தியா விமான ஊழியரை தாக்கிய சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Ravindra Gaikwad-க்கு விமானத்தில் பயணிக்க அதிரடி தடை

Mar 24 2017 6:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஏர் இந்தியா விமான ஊழியரை தாக்கிய சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Ravindra Gaikwad-க்கு, விமானத்தில் பயணிக்க அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் Osmanabad-ஐச் சேர்ந்த சிவசேனா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Ravindra Gaikwad, புனேவில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். அப்போது, உயர் வகுப்பு இருக்கை ஒதுக்காததால் ஆத்திரம் அடைந்த அவர், ஏர் இந்தியா வாடிக்கையாளர் சேவை அதிகாரியான 61 வயதான சுகுமாரை தனது காலணியால் சரமாரியாக தாக்கியதுடன், தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, Ravindra Gaikwad மீது ஏர் இந்தியா விமான ஊழியர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், ஏர் இந்தியா அதிகாரியை தாக்கிய சிவசேனா எம்.பி., இனி விமானத்தில் பயணிக்க விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு தடை விதித்துள்ளது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த Ravindra Gaikwad, தான் செய்ததில் தவறில்லை என்றும், இதற்காக மன்னிப்பு கோர முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00