மல்லையாவை ஒப்படைக்குமாறு இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்றது பிரிட்டன் - கைது செய்வதற்கான வாரண்ட் பிறப்பிக்க அந்நாட்டு நீதிமன்றம் நடவடிக்கை

Mar 25 2017 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, லண்டனில் தலைமறைவாக இருக்கும் தொழிலதிபர் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, மல்லையாவை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பிக்கவுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, கடனை திருப்பிச்செலுத்தாமல் நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டார். லண்டனில் தங்கியிருக்கும் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் கோரிக்கையை பிரிட்டன் அரசு ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், மல்லையாவை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்க அந்நாட்டு நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த தகவலை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் திரு.கோபால் பக்லே தெரிவித்தார். மேலும், விஜய் மல்லையாவை நாடு கடத்தும் நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திடம் கடந்த மாதம் 8-ந் தேதி இந்தியா முறைப்படி வேண்டுகோள் கடிதம் சமர்ப்பித்தது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இங்கிலாந்து அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அந்த கடிதத்தில், இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் கையெழுத்திட்டு சான்றளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00