உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு 200 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்பு : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் சம்பளம் இனி மாதம் ரூ.1 லட்சத்திலிருந்து, 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாக உயரும்

Mar 26 2017 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு 200 சதவீதம் வரை ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதன்மூலம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் சம்பளம் இனி மாதம் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாக உயரும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு அடிப்படையில் அண்மையில் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, நீதிபதிகளுக்கான சம்பளத்தையும் உயர்த்த, 3 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்றக்குழு மத்திய அரசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரிந்துரை செய்தது. இதன்படி, தலைமை நீதிபதிக்கு 3 லட்சம் ரூபாய் வரை ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என தெரிவித்தது.

இந்நிலையில், இந்தக்குழு அளித்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, தலைமை நீதிபதியின் சம்பளம் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரையிலும்,உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் சம்பளம் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயாகவும் உயரும் என தெரிகிறது. இதுதவிர, ஓய்வுபெறும் நீதிபதிகளுக்கான ஓய்வூதியப் பலன்களை அதிகரிக்கவும் உச்சநீதிமன்றக்குழு பரிந்துரைத்துள்ளது.

உச்சநீதிமன்றக் குழுவின் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு, நாடாளுமன்றத்தில் நீதிபதிகள் சம்பளம் தொடர்பான சட்டத்தில் மத்திய சட்ட அமைச்சர் திருத்தம் கொண்டு வருவார் என தெரிகிறது.

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான சம்பள விகிதம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00