மின்னணு பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து பின்பற்றும் என பிரதமர் தகவல் - ஊழல், கருப்புப் பணத்தை மக்கள் நிராகரித்துவிட்டதாகவும் பெருமிதம்

Mar 26 2017 3:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

மின்னணு பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து மேற்கொள்ளும் என வானொலியில் பேசிய பிரதமர் திரு. மோடி தெரிவித்துள்ளார். ஊழல், கருப்புப் பணத்தை மக்கள் நிராகரித்துவிட்டதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று மனதோடு பேசுகிறேன் என்ற வானொலி நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இன்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், பங்களாதேஷ் நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி, அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஒரு புதிய இந்தியா 125 கோடி மக்களின் ஆற்றலை வழிப்படுத்தி வருவதாகவும், இதன்மூலம் மிக அழகான ஒரு இந்தியா உருவெடுக்கும் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறினார். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் நாட்டுக்காக இன்னுயிர் நீத்ததை மிகவும் வியந்து போற்றிய பிரதமர், இம்மூவரும் ஒருபோதும் தங்கள் உயிரைப் பற்றி கவலைப்பட்டதில்லை என்றும் தெரிவித்தார். நாடு முழுவதும் உணவுப் பொருட்கள் வீணாவது துரதிருஷ்டவசமானது எனக் குறிப்பிட்ட மோடி, இதனை தவிர்க்கும் வகையில் இளைஞர்கள் தொழில்நுட்பங்கள் மூலம் அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். மின்னணு பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும், ஊழல், கருப்புப் பணத்தை மக்கள் நிராகரித்துவிட்டதாகவும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00