குல்பூஷன் யாதவ் விவகாரத்தில் இந்தியா ஆத்திரமூட்டும் வகையில் செயல்படுகிறது - பாகிஸ்தான் பகிரங்கச் குற்றச்சாட்டு

Apr 21 2017 7:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
குல்பூஷன் யாதவ் விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடு ஆத்திரமூட்டும் வகையில் உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் இந்தியா, மேல்முறையீடு செய்யவும் முடிவு செய்துள்ளது. ஆனால், வெளியுறவுத்துறை மூலமாக குல்பூஷன் யாதவை சந்தித்து பேசுவதற்கும் பாகிஸ்தான் அனுமதி அளிக்க மறுத்து வருகிறது. மேலும் அதற்கான ஆதாரங்களின் நகல்களை கேட்டும் பாகிஸ்தான் தர மறுத்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணை தூதர் சையது ஹைதர் ஷாவிற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று சம்மன் அளித்துள்ளது. குல்பூஷண் ஜாதவ் நிரபராதி என்றும், அவர் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு இந்தியா தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியாவின் செயல்கள் பாகிஸ்தானை ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நபீஸ் ஷகாரியா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் உளவு மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக குல்பூஷண் ஜாதவிற்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், காஷ்மீர் பிரச்சனை, பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர்களை விடுவிக்கக் கோருவது உள்ளிட்ட இந்தியாவின் செயல்கள் பாகிஸ்தானை ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2914.00 Rs. 3117.00
மும்பை Rs. 2936.00 Rs. 3109.00
டெல்லி Rs. 2949.00 Rs. 3123.00
கொல்கத்தா Rs. 2949.00 Rs. 3120.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.90 Rs. 42900.00
மும்பை Rs. 42.90 Rs. 42900.00
டெல்லி Rs. 42.90 Rs. 42900.00
கொல்கத்தா Rs. 42.90 Rs. 42900.00