அருணாச்சலப்பிரதேச மாநில எல்லை கிராமங்களுக்கு சீனா பெயர் வைத்த விவகாரம் - பெயரை மாற்றி சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதிகளை சொந்தம் கொண்டாட முயற்சிக்க வேண்டாம் என இந்தியா எச்சரிக்கை

Apr 21 2017 9:29AM
எழுத்தின் அளவு: அ + அ -
அருணாச்சலப்பிரதேச எல்லையையொட்டிய பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டினாலும், சர்ச்சைக்குரிய பகுதிகளை அந்நாடு சட்டபூர்வமானதாக மாற்றிவிட முடியாது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப்பிரதேசம் சீன எல்லையையொட்டி அமைந்துள்ளது. இதனால் இவ்விரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து எல்லைப்பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் எல்லையில் அமைந்துள்ள அருணாச்சலப்பிரதேசத்தின் 6 கிராமங்களுக்கு சீனா புதிதாக பெயர்களை சூட்டியது. இது இந்திhயவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து டெல்லியில் நேற்று கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் திரு.கோபால் பகாலே, இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதிகளை சீனா சட்டபூர்வமாக வசப்படுத்திக் கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். அருணாச்சலப்பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை யாரும் மறுக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். பெயர் வைத்த விவகாரம் குறித்து சீன அரசு இதுவரை தங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் திரு.பகாலே குறிப்பிட்டார். சீனாவின் அதிருப்தியாளரான புத்தமதத் தலைவர் தலாய்லாமா, அண்மையில் அருணாச்சலப்பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதற்கு அந்நாட்டு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எல்லையோர கிராமங்களுக்கு பெயர் சூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2779.00 Rs. 2972.00
மும்பை Rs. 2799.00 Rs. 2964.00
டெல்லி Rs. 2811.00 Rs. 2977.00
கொல்கத்தா Rs. 2811.00 Rs. 2974.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.90 Rs. 41900.00
மும்பை Rs. 41.90 Rs. 41900.00
டெல்லி Rs. 41.90 Rs. 41900.00
கொல்கத்தா Rs. 41.90 Rs. 41900.00