மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி டேவிட் ஹெட்லியை இந்தியாவிற்கு அனுப்ப வேண்டும் - அமெரிக்காவிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்தல்

Apr 21 2017 12:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி டேவிட் ஹெட்லியை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என அமெரிக்க புலனாய்வு அமைப்பிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். மும்பையில் புகழ்பெற்ற தாஜ் ஹோட்டல், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய கட்டடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தில் உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் நீதிமன்ற உத்தரவின்பேரில் தூக்கிலிடப்பட்டன. தீவிர விசாரணைக்குப் பின்னர், இச்சம்பவத்தில் தீவிரவாதி டேவிட் ஹெட்லி என்பவன், மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மும்பை தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் கொல்லப்பட்ட வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவன் அமெரிக்க சிறையில் தண்டனை காலத்தை அனுபவித்து வரும் நிலையில், மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் தேசிய புலனாய்வு நிறுவனம், ஹெட்லியை இந்தியாவுக்கு அனுப்பும்படி அமெரிக்க புலனாய்வு நிறுவனத்திடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஹெட்லிக்கு மிகவும் நெருக்கமான ராணாவையும் நாடு கடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 16:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2957.00 Rs. 3107.00
மும்பை Rs. 3002.00 Rs. 3190.00
டெல்லி Rs. 3003.00 Rs. 3191.00
கொல்கத்தா Rs. 3005.00 Rs. 3193.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 43000.00
மும்பை Rs. 43.00 Rs. 43000.00
டெல்லி Rs. 43.00 Rs. 43000.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 43000.00