டெல்லியில் தொடரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் - கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மேலும் கடுமையாகும் என எச்சரிக்கை

Apr 21 2017 1:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வரும் தமிழக விவசாயிகள், கோரிக்கைளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு விதித்திருந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. தங்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்காவிடில், நாளை முதல் போராட்டத்தை மேலும் கடுமையாக்கப்போவதாக விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

பயிர் கடன் தள்ளுபடி, காவேரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த மாதம் 14-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான போராட்டங்களை நடத்தியும், விவசாயிகளை இதுவரை, பிரதமர் நேரில் சந்திக்காமல் புறக்கணித்து வருகிறார். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உரிய உறுதியளிக்காமல் மத்திய அமைச்சர்களும் அலட்சியம் காட்டி வருகின்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கை, தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வரும் தமிழக விவசாயிகள், பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்டவை தொடர்பாக, மத்திய அரசு இரு நாட்களுக்குள் எழுத்துப் பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என கெடு வித்திருந்தனர். அவர்கள் விதித்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், போராட்டக்களத்தில் இரு நாட்களாக அமைதியுடன் காத்திருக்கும் தமிழக விவசாயிகள், மத்திய அரசு உறுதியளிக்காத பட்சத்தில், நாளை முதல் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக எச்சரித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2777.00 Rs. 2970.00
மும்பை Rs. 2797.00 Rs. 2962.00
டெல்லி Rs. 2810.00 Rs. 2976.00
கொல்கத்தா Rs. 2810.00 Rs. 2973.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 40212.00
மும்பை Rs. 43.00 Rs. 40212.00
டெல்லி Rs. 43.00 Rs. 40212.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 40212.00