திருப்பதி அருகே பாதசாரிகள் மீது லாரி மோதிய கோர விபத்தில் 20 பேர் பலி, பலர் படுகாயம் - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க ஆந்திர முதலமைச்சர் உத்தரவு

Apr 21 2017 6:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே, பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மீது லாரி மோதிய கோர விபத்தில் 20 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 10 பேரின் நிலைமை மோசமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ஏர்பேடு என்ற இடத்தில், புடலபட்டு - நாயுடுபேட்டை சாலையில், அதிவேகமாக வந்த லாரி, அங்கு பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மீது மோதிவிட்டு சாலையோர கடை மீது மோதியது. இதில், பயணிகள் உட்பட 20 பேர் பலியாயினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள Ruia மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேரின் நிலைமை மோசமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது. இந்த விபத்தால் ஏர்பேடு, காளஹஸ்தி, ரேணிகுண்டா, திருப்பதி ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள ஆந்திர முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2957.00 Rs. 3107.00
மும்பை Rs. 3002.00 Rs. 3190.00
டெல்லி Rs. 3003.00 Rs. 3191.00
கொல்கத்தா Rs. 3005.00 Rs. 3193.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 43000.00
மும்பை Rs. 43.00 Rs. 43000.00
டெல்லி Rs. 43.00 Rs. 43000.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 43000.00