நாகாலாந்தில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய தேவாலயம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கென திறப்பு

Apr 27 2017 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகாலாந்தில் கட்டப்பட்ட, ஆசியாவிலேயே மிகப்பெரிய தேவாலயம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கென திறக்கப்பட்டுள்ளது.

நாகாலாந்து மாநிலத்தின் Zunheboto நகரில் ஆசியாவின் மிகப்பெரிய தேவாலயமான சுமி பாப்டிஸ்ட் தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 36 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த 10 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த தேவாலயம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து ஆயிரத்து 865 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த தேவாலயம், 203 அடி நீளமும், 153 அடி அகலமும், 166 அடி உயரமும் கொண்டுள்ளது. 27 அறைகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயத்தில் ஒரே நேரத்தில் 8 ஆயிரத்து 500 பேர் அமர்ந்து பிரார்த்தனை செய்ய வசதியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒன்றறை கிலோ மீட்டர் தூரம் வரை ஓசை கேட்கும் அளவுக்கு, 500 கிலோ எடையில் தேவாலய மணி பொறுத்தப்பட்டுள்ளது. இந்த மணி போலந்து நாட்டில் இருந்து 15 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். இந்நிலையில், ஆசியாவின் மிகப்பெரிய தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யும் மகிழ்ச்சியுடன் பக்தர்கள் சுமி பாப்டிஸ்ட் தேவாலயத்திந்கு வந்து செல்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00