தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக பெண் தீவிரவாதத் தலைவர் ஸ்ரீநகரில் கைது

Apr 27 2017 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக, பெண் தீவிரவாதத் தலைவரை போலீசார் ஸ்ரீநகரில் கைது செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில், ஆசியா அன்ராபி என்ற பெண் தீவிரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர். இவர், Dukhtran-e-Millat என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்தார். பிரிவினைவாதத்தை வலியுறுத்தி வந்த இந்த இயக்கம், காஷ்மீர் மக்களிடம் அவ்வப்போது பிரிவினை தொடர்பான கோஷங்கள் அச்சிடப்பட்ட பிரசுரங்களை வழங்கி வந்தது. மேலும், இஸ்லாமிய விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டும் இந்த அமைப்பு பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்து வந்தது. இந்திய அரசுக்கு எதிராக அன்ராபி கருத்துகளை தெரிவித்து வந்ததாகவும், அவரது கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, பலர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவரது உணர்ச்சிகரமான பேச்சு அடங்கிய வீடியோ காட்சிகள், தீவிரவாத முகாம்களில் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. அன்ராபியின் கணவர் ஆசிஃப் உசேன் பக்டூ ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00