தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் - நஷ்டஈடு கோரிய வழக்கில், 8 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு

Apr 27 2017 2:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக மீனவர் பிரிட்ஜோ, இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கையிடம் இருந்து உரிய நஷ்டஈடை பெற்றுத்தர கோரிய வழக்கில், 8 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடி தளத்திலிருந்து கடந்த மாதம் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் பிரிட்ஜோ, நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு சார்பில் ஏற்கனவே பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், தேசிய மீனவர் பேரவை சார்பில், கடந்த 6-ம் தேதி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிப்பது மீனவர்களின் உரிமை என்றும், மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது மனித உரிமை மீறல் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இச்செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்றும், உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், இப்பிரச்னையில் இலங்கையிடம் இருந்து உரிய நஷ்டஈடை பெற்றுத்தர 8 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டதுடன், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00