நாளை திரைக்கு வருகிறது பாகுபலி-2-ம் பாகம் - ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் டிக்கெட் பெற 3 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நிற்கும் ரசிகர்கள் கூட்டம்

Apr 27 2017 4:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகுபலி-2 திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் 3 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் காத்திருந்து மக்கள் டிக்கெட்டுகளை வாங்கி செல்கின்றனர்.

நாளை வெளியாகவுள்ள பாகுபலி-2 திரைப்படத்தை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என உலகம் முழுவதிலுமுள்ள சினிமா ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, இந்தியாவில் இதற்கு முன்பு எந்த திரைப்படமும் படைக்காத சாதனையை பாகுபலி படைக்கும் என்று சினிமா வணிகர்கள் கணித்துள்ளனர்.

திரைப்படத்தை காண்பதற்காக டிக்கெட் முன்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், அமெரிக்காவில் ஆன்லைன் முன்பதிவில் 19 கோடி ரூபாய் வசூல் செய்து பாகுபலி-2 சாதனை படைத்துள்ளது. பாகுபலி-2 படத்தின் டிக்கெட்டுகளை வாங்க தமிழகத்திலும் கூட்டம் அலை மோதுகிறது.

இதனிடையே, ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநில மக்களிடையே பாகுபலி-2 திரைப்படம் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியாததால் அங்குள்ள மக்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி செல்கின்றனர். சில பகுதிகளில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்ட ஆட்சியர் அமர்பலி கடா, மாநில அரசு ஊழியர்களுக்காக பாகுபலி-2 திரைப்படத்தின் 350 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளார். நகரை சுத்தம் செய்வதில் பெரும் ஆர்வம் காட்டிய ஊழியர்கள் அனைவரும் பிரம்மாண்டமான மாலில், இந்த திரைப்படத்தை முதல்நாளே பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் டிக்கெட்டுகளை அவர் புக் செய்துள்ளார். ஒவ்வொரு டிக்கெட்டின் விலையும் 500 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00