இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 29 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் சிறைபிடித்த சம்பவத்தால் பரபரப்பு

Apr 27 2017 8:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 29 மீனவர்கள் மற்றும் அவர்களின் 5 படகுகளையும் பாகிஸ்தான் கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கடல் பகுதியில் எல்லைகள் சரியாக வரையறுக்கப்படாததால், மீனவர்கள் அவ்வப்பொழுது எல்லை தாண்டி சென்றுவிடும் சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன. இதனால், இருநாடுகளைச் சேர்ந்த மீனவர்கள் கைதாகும் நிலை நிலவுகிறது. இந்நிலையில், இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 29 பேரையும், அவர்களின் 5 படகுகளையும், பாகிஸ்தான் கடற்படையினர் சிறைபிடித்து கராச்சி கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து நாளை, அவர்கள் கராச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் மீதான சட்ட ரீதியான நடவடிக்கைக்குப் பின்னர் இந்திய வெளியுறவுத்துறை சார்பில் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. கைது செய்யப்படும் மீனவர்களை மீட்பது குறித்து இருநாடுகளிடையே ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு அரசியல் காரணங்களால் ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடும் அவலம் தொடர்ந்து வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00