நக்சலைட் தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் - வீரர்களின் குழந்தைகளுக்கான செலவுகளை ஏற்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அறிவிப்பு

Apr 28 2017 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த 25 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களின் குழந்தைகளுக்கான செலவுகளை ஏற்றுக் கொள்வதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட வனப்பகுதியில் நக்சலைட் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 25 மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். அவர்களில், பத்மநாதபன், செந்தில்குமார், அழகு பாண்டி, திருமுருகன் ஆகிய தமிழக வீரர்களும் அடங்குவர். இந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகள் நிவாரணத் தொகையை அறிவித்திருக்கும் நிலையில், மேலும் பலர் உதவ முன் வந்துள்ளனர். குறிப்பாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான கவுதம் காம்பீர் 25 வீரர்களின் குழந்தைகளுக்கான பராமரிப்புச் செலவுகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார். அவரது ஊடக மேலாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00