குஜராத்தில் வேகமாக வந்த சரக்கு லாரி சாலையின் ஓரத்தில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது கண்மூடித்தனமாக மோதிய வீடியோ காட்சி வெளியீடு
Apr 28 2017 11:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் மாநிலத்தில் வேகமாக வந்த ஒரு சரக்கு லாரி, சாலையின் ஓரத்தில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது கண்மூடித்தனமாக மோதிய வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் வாகன ஓட்டி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
குஜராத் மாநிலம் Valsad நகரத்தில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் உள்ள சாலையில், சரக்கு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக சுரங்கத்திலிருந்து வெளியே வந்த இருசக்கரவாகனம் மீது அந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு லாரி மோதும் பரபரப்பு வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.