துருக்கி அதிபர் வரும் 30-ம் தேதி இந்தியாவில் சுற்றுப்பயணம் : இருநாடுகள் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்ப்பார்ப்பு

Apr 28 2017 11:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

துருக்கி அதிபர் Recep Tayyip Erdogan வரும் 30-ம் தேதி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியா இணைவதற்கான முயற்சி மற்றும், இருநாடுகள் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

துருக்கி அதிபர் Recep Tayyip Erdogan வரும் 30-ம் தேதி இந்தியா வருகிறார். மே 1-ம் தேதி இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது, NSG குழுவில் இந்தியா இணைவதற்கான முயற்சி, தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவும் - துருக்கியும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் வர்த்தகம் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த தகவலை வெளியுறவுத் துறை செயலாளர் Ruchi Ghanashyam தெரிவித்தார். NSG அமைப்பின் உறுப்பு நாடான துருக்கி, அந்த அமைப்பில் இந்தியா இணைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்று சீனா கூறி வருகிறது. இந்த கருத்துதான், இந்தியா என்.எஸ்.ஜி.யில் இணைவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. ஒருமித்த கருத்து என்ற கொள்கையுடன் அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00