கோவா மாநில தேர்தல் தோல்வியை அடுத்து பொறுப்பாளர் பதவியில் இருந்து திக்விஜய் சிங்கை காங்கிரஸ் கட்சி நீக்கம்

Apr 30 2017 10:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவா மாநில தேர்தல் தோல்வியை அடுத்து அம்மாநில பொறுப்பாளர் பதவியில் இருந்து திரு.திக்விஜய் சிங்கை, காங்கிரஸ் கட்சி நீக்கிவிட்டது.

கோவா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றும், சிறிய கட்சிகளின் ஆதரவை பெற முடியாததால் ஆட்சியமைக்க முடியவில்லை. பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக திரு.மனோகர் பாரிக்கர் பதவியேற்றார். பா.ஜ.க. குதிரைபேரத்தில் ஈடுபட்டு எம்.எல்.ஏ.க்களை வாங்கி ஆட்சியமைத்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

மாநில மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததற்காக கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் திரு.திக்விஜய் சிங் வலியுறுத்தினார். மேலும், கோவா பார்வர்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திக்காதது தங்கள் தவறு என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கோவா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கான காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்புகளில் இருந்து, திக் விஜய் சிங் நீக்கப்பட்டுள்ளார். கோவா மாநிலத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளராக செல்லக்குமார், மாநில செயலாளராக அமித் தேஷ்முக் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்திற்கான பொதுச்செயலாளராக கே.சி.வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக, மாணிக் தாகூர், பி.சி.விஷ்ணுநாத், மது யாஷ்கி கவுட், டாக்டர் சேக் செயில் ஜனாத் ஆகிய 4 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00