இட ஒதுக்கீடு கேட்டு Jat சமூகத்தினர் நடத்திய போராட்டத்தில் பயங்கர வன்முறை - வாகனங்களுக்கு தீவைப்பு - டெல்லி-மும்பை வழித் தடத்தில் ரயில் சேவை பாதிப்பு

Jun 23 2017 9:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

இட ஒதுக்கீடு கேட்டு தொடர் போராட்டம் நடத்தி வரும் Jat சமூகத்தினர், ராஜஸ்தான் மாநிலம் Bharatpur-ல் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், டெல்லி-மும்பை ரயில் தடத்தில் சுமார் 100 ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஹரியானா மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள Jat சமூகத்தினர், தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, மாநில அரசின் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதேபோல், ராஜஸ்தான் மாநிலத்திலும் Jat சமூகத்தினர், தங்களை இதர பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று இடஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில், Alwar-Mathura இடையேயான ரயில் பாதையில் தடுப்புகளை அமைத்து அவர்கள் மறியல் செய்தனர். இதேபோன்று, Agra-Bandikui ரயில் பாதையிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி-மும்பை இரயில் பாதைகளின் கோட்டா மற்றும் ஆக்ரா பிரிவுகளில், ஆறு வெவ்வேறு இடங்களில் ஜாட் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், டெல்லி-மும்பை வழித்தடத்தில் சுமார் 100 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

சட்டம்-ஒழுங்கை பராமரிக்க போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனிடையே, OBC ஆணையம், இன்று தனது அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்துள்ளதால், ஜாட் சமூகத்தினர் இப்போராட்டத்தைக் கைவிட வேண்டும் என சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அருண் சதுர்வேதி கேட்டுக்கொண்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00