கைலாஷ் மானசேரோவர் யாத்திரை மேற்கொண்ட 50 இந்திய யாத்ரீகர்களுக்கு அனுமதி மறுப்பு - சீன அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை

Jun 24 2017 11:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

கைலாஷ் மானசேரோவர் யாத்திரை மேற்கொள்ள சென்ற 50 இந்திய யாத்ரீகர்களுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது.

இந்திய - சீனா எல்லையில் உள்ள திபெத் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரத்து 500 மீட்டர் உயரத்தில் கைலாய மலை உள்ளது. அங்குள்ள மானசரோவர் புனித தலத்திற்கு இந்தியர்கள் ஆண்டுக்கு ஒருமுறை யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டு இந்திய யாத்ரீகர்கள் 50 பேர் கொண்ட, முதல் யாத்ரீகர்கள் குழு இந்தியாவிலிருந்து கடந்த 16-ம் தேதி கைலாஷ் மானசரோவருக்கு புறப்பட்டனர். சிக்கிம் மாநிலம் சென்று, அங்கிருந்து சீனாவின் நாதுலா கணவாய் வழியாக பயணம் மேற்கொண்ட அவர்களை, சீன அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனர். இதனால் கடந்த ஒரு வார காலமாக யாத்ரீகர்கள் அங்கேயே முடங்கியுள்ளனர்.

மேலும், இரண்டாம் கட்டமாக புறப்பட்ட மேலும் சில இந்திய யாத்ரீகர்கள் சிக்கிம் மாநில தலைநகர் காங்டாங் நகரிலேயே தடுத்த நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாத்ரீகளின் நிலை குறித்து தகவலறிந்து இந்திய அரசு, சீன அரசுடன் தொடர்பு கொண்டு பேசி வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00