கூர்க்காலாந்து கோரிக்கை - சிக்கிம் அரசின் ஆதரவுக்கு மேற்கு வங்க அரசு கடும் கண்டனம்

Jun 24 2017 11:12AM
எழுத்தின் அளவு: அ + அ -

கூர்க்காலாந்து விவகாரத்தில் சிக்கிம் அரசு கொடுத்துள்ள ஆதரவிற்கு மேற்கு வங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் வடபகுதியில் டார்ஜிலிங் உள்ளடக்கிய மலைப்பிரதேசங்களைப் பிரித்து, தனியாக கூர்காலாந்து மாநிலம் அமைக்கவேண்டும் என வலியுறுத்தி, கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா இயக்கத்தினர், கடந்த சில நாட்களாக காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதிகளில் கடையடைப்பு, போக்குவரத்து முடக்கம், வன்முறை சம்பவங்கள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்புப் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ள நிலையில், பிரச்சனையை பேசித் தீர்வுகாணுமாறு மத்திய அரசு வலியுறுத்தியது.

இந்நிலையில், கூர்காலாந்து தனி மாநில கோரிக்கைக்கு சிக்கிம் கொடுத்துள்ள ஆதரவிற்கு மேற்கு வங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு, மேற்கு வங்க அமைச்சர் பார்தா சாட்டர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், ஒரு மாநிலத்தின் விவகாரத்தில் மற்றொரு மாநிலம் ஏன் தலையிட வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் கூர்க்காலாந்து விவகாரம், "முழுக்க முழுக்க" மேற்கு வங்க மாநிலத்தின் பிரச்சனை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00