இந்திய ரயில்களில் பீகார் மாநிலத்தவர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்க வலியுறுத்தி போராட்டம் : ரயில் நிலையத்தில் மாணவர்கள் திடீர் தாக்குதல் நடத்தி தீ வைத்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு

Jun 24 2017 1:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய ரயில்களில் பீகார் மாநிலத்தவர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்க வலியுறுத்தி, அம்மாநிலத்தில் போராட்டம் வெடித்துள்ளது. அங்குள்ள ரயில் நிலையம் ஒன்றில் மாணவர்கள் திடீர் தாக்குதல் நடத்தி, தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் Nalanda மாவட்டத்தில் உள்ள Rashtriya Janata Dal கட்சியைச் சேர்ந்த மாணவர் பிரிவு, இந்திய ரயில்வேத்துறையில் பீகார் மாநிலத்தவர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, Sharif ரயில் நிலையத்தின் உள்ளே புகுந்தனர். கோஷமிட்டவாறு அலுவலகத்தில் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி, தீ வைத்துக் கொழுத்தினர். அலுவலகத்தில் வைத்திருந்த புக்கிங் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர். இதனையடுத்து, ரயில் தண்டவாளத்தை சேதப்படுத்தினர். மேலும், ரயில் நிலையம் அருகே இருந்த வாகனங்களையும் சேதப்படுத்தினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கலவரக்காரர்களை விரட்டியடித்தனர். அப்போது, போலீசார் மீது மாணவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். வன்முறையில் ஈடுபட்டவர்களில் சிலரை கைது செய்தனர். அந்தப்பகுதியில் வன்முறைகளை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00