பாகிஸ்தான் பயங்கரவாதி ஹஃபீஸ் சயீத், ஹுரியத் மாநாட்டு அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

Jun 24 2017 3:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீரில் தீவிரவாதச் செயல்களை அரங்கேற்றுவதற்கு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மேற்கொண்டது தொடர்பாக பாகிஸ்தான் பயங்கரவாதி ஹஃபீஸ் சயீத், ஹுரியத் மாநாட்டு அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி பிரிவினைவாதிகளும், தீவிரவாதிகளும் போராட்டம் நடத்துவது தொடர்கதையாக உள்ளது. அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி அவர்கள் தாக்குதல் நடத்துவதுடன், வன்முறையிலும் ஈடுபடுகின்றனர். வேண்டுமென்றே காஷ்மீரில் பதற்றமான சூழலை உருவாக்கும் நோக்கில் இத்தகைய சம்பவங்களை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஹஃபீஸ் சயீத் உள்ளிட்டோர் மறைமுகமாக இயக்குவது தெரியவந்தது. இதற்காக, காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு, பயங்கரவாத அமைப்புகள் சார்பில் சட்டவிரோதமாக நிதியுதவி வழங்கப்படுவதும் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக ஹஃபிஸ் சயீத் உட்பட பயங்கரவாதிகள் மீதும், ஹுரியத் மாநாட்டு கட்சி தலைவர்கள் சிலர் மீதும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00