இந்தியாவை அமெரிக்காவுக்கு நிகராக நிலை உயர்த்த சர்வதேச நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் - GST வரி அமலாக்கத்தால் இந்தியா, வர்த்தகத் துறையினருக்கு நட்பு நாடாக உருவாகும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உரை

Jun 26 2017 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் பெருமளவு முதலீடு செய்வதன் மூலம், இந்தியாவை அமெரிக்கா போன்ற வல்லரசாக மாற்ற முடியும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் 2 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, சர்வதேச நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்றக் கூட்டத்தில் உரையாற்றினார். இந்தியாவை அமெரிக்காவுக்கு இணையாக நிலை உயர்த்த சர்வதேச நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். GST வரி விதிப்புக் காரணமாக, இந்தியா தற்போது வர்த்தக நட்பு நாடாக உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பின்பற்றி வரும் கொள்கைகள் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிக அளவில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும், பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியின் மூலம், 500 ரயில் நிலையங்களில் ஹோட்டல்களைத் திறக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும், இதன்மூலம், சுற்றுலாப் பயணிகளின் வருகை பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 20 பெரிய நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து, வர்ஜீனியா நகரில் வசிக்கும் இந்தியர்களிடையே பேசிய பிரதமர், இந்த தலைமுறையிலேயே இந்தியா வளர்ச்சியடைந்த வல்லரசாக மாறும் என்று உறுதியளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்க அதிபர் டோனால்டு டிரம்ப்பை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, இருநாட்டு தூதுக் குழுவினரும் சந்திக்கவுள்ளனர். இதனைத்தொடர்ந்து இருநாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள்கையெழுத்தாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, பாதுகாப்பு, பயங்கரவாதத் தடுப்பு போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து இருநாடுகளும் ஒத்துழைப்பது தொடர்பாக புதிய உடன்பாடுகள் ஏற்படலாம் எனத் தெரிகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00