தேசிய கல்விக் கொள்கையை வகுக்க பிரபல விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் குழு அமைப்பு - மத்திய அரசு நடவடிக்கை

Jun 26 2017 2:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேசிய கல்வி கொள்கையை வரையறுக்க பிரபல விஞ்ஞானி திரு. கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

நாட்டின் கல்விக் கொள்கையை மறுசீரமைக்கும் பொருட்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான விஞ்ஞானி திரு. கஸ்தூரி ரங்கன், தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ள இந்த குழுவில் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்வியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். மாணவர்களின் கல்வி திறனை அதிகரிப்பது, நாடு முழுவதும் ஒரே விதமான கல்வி கொள்கைகளை கொண்டு வருவது உள்ளிட்டவைகள் குறித்து இந்த குழு ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.

மத்திய அமைச்சரவை முன்னாள் செயலாளர் திரு. டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையிலான ஐவர் குழு தயாரித்த கல்வி கொள்கை அறிக்கை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ம் தேதியன்று மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையும் தற்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00