தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுவதால் மக்கள் கடும் அவதி

Jun 26 2017 6:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோடை காலம் முடிவடைந்ததை அடுத்து, தென்மேற்கு பருவமழை பல்வேறு மாநிலங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஆற்றுப் பகுதியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றை கடக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். மேலும் அங்கு நடைபெற்று வந்த பாலம் கட்டும் பணிகள் தொய்வடைந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலிலும் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலையோரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனிடையே கல்லூரி மாணவர்கள் சிலர் ராய்கர் மாவட்டத்தில் உள்ள தேவ்குண்ட் அருவியில் குளித்துக் கொண்டிருந்த போது, அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் வெள்ளத்திற்கு நடுவே சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00