அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரம் - பீஹாரில் உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை 153-ஆக உயர்வு

Aug 19 2017 7:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

அசாம், பீஹார், மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்‍கு காரணமாக மக்‍களின் இயல்பு வாழ்க்‍கை முடங்கியுள்ளது. பீஹாரில் மட்டும் வெள்ளப்பெருக்‍கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 153-ஆக உயர்ந்துள்ளது.

அசாம், பீஹார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், அண்மையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்‍கு காரணமாக, லட்சக்‍கணக்‍கான மக்‍கள் கடுமையாகப் பாதிக்‍கப்பட்டுள்ளனர். மின்சார விநியோகம் தடைபட்டு, பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. ரயில் மற்றும் சாலைப் போக்‍குவரத்தும் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பீஹார் மாநிலத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வெள்ளப் பெருக்கு காரணமாக, 17 மாவட்டங்களில் சுமார் ஒரு கோடியே 8 லட்சம் பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வெள்ளப்பெருக்‍கால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 153-ஆக உயர்ந்துள்ளது.

அசாம் மாநிலத்தில், வெள்ளம் பாதித்த பகுதிகளில், சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிக்‍கித் தவித்து வருகின்றனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அசாமில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 144-ஆக உயர்ந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 22 மாவட்டங்களில் சுமார் 15 லட்சம் மக்‍கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்‍கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்‍களுக்‍கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கோரக்‍பூரில், Rapti ஆற்று நீர் ஊருக்‍குள் புகுந்ததால், ஏராளமான குடியிருப்புகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

மேற்கு வங்க மாநிலத்தில், Coochbehar, Dakshin Dinajpur, Jalpaiguri உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்‍கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்‍கப்பட்டவர்களுக்‍கு உதவும் வகையில், 700-க்‍கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்‍கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்‍கித்தவித்த 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00