காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கும், தீவிரவாத வன்முறைக்கும் நிதி அளித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் ஸகூர் வட்டாலியை 10 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Aug 19 2017 7:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத செயல்களுக்கும் தீவிரவாத வன்முறைக்கும் நிதி அளித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் ஸகூர் வட்டாலியை பத்து நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறை மற்றும் பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி அளிக்கப்படுவதை தேசிய புலனாய்வு அமைப்பினர் கண்டுபிடித்தனர். இதனைதொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில், தேசிய புலனாய்வு அமைப்பினரும், வருமான வரித்துறையினரும் சோதனை மேற்கொண்டு, பல ஆதாரங்களை கைப்பற்றினர். இதனைதொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றது தொடர்பாக ஸ்ரீ்நகரை சேர்ந்த தொழிலதிபர் ஸகூர் அகமது வட்டாலிக்கு சொந்தமான இடங்களில், தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் பாகிஸ்தானில் இருந்து பணம் பெற்றதற்கான ஆதாரங்களும், அந்த பணத்தை தீவிரவாத அமைப்புகளுக்கு வழங்கியதற்கான கணக்கு குறிப்புகளை கொண்ட ஆவணங்களும் சிக்கின. இதன் அடிப்படையில் ஸகூர் அகமது வட்டாலியை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.

இதனையடுத்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் மேலும் தகவல்களைப் பெற வேண்டியிருப்பதால் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என தேசிய புலனாய்வு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற நீதிமன்றம், வடாலியை பத்து நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00