பாகிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை - அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல்

Aug 21 2017 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தானில், கடந்த 5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் சேக் ரோஹேயில் கேட்ட கேள்விக்கு, உள்துறை அமைச்சகம் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில், கடந்த 2012-ம் ஆண்டு 48 இந்தியர்களுக்கு பாகிஸ்தான் குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2013-ம் ஆண்டு 75இந்தியர்களுக்கும், 2014-ம் ஆண்டு 76 இந்தியர்களுக்கும் குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 2015-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்த 15 பேருக்கும், கடந்த ஆண்டு 69 பேருக்கும், இந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வரை 15 பேருக்கும் பாகிஸ்தான் குடியுரிமை அளித்துள்ளது. ஆக மொத்தம், கடந்த 5 ஆண்டுகளில், பாகிஸ்தானில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் குடியுரிமை பெறுவது உலகளவில் கடினமான பணியாக உள்ளது என்றும், இந்தியா, அஃப்கனிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பர்மாவிலிருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேறுவதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சம் அளித்துள்ள பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00