பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் ஆலோசனை

Aug 21 2017 7:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில், இன்று ஆலோசனை நடத்துகிறார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்களில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலங்களின் சமூக வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கும் விதமாக 13 மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் 13 முதல்அமைச்சர்களுடன் 6 துணை முதல்அமைச்சர்களும், சில மத்திய அமைச்சர்களும் கலந்துகொள்வார்கள் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய அரசின் முக்கிய திட்டங்களை மாநிலங்களில் செயல்படுத்துவது குறித்தும், மாநிலங்களின் சமூக வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. மேலும், முதல் அமைச்சர்கள் தங்களது மாநிலங்களில் செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்வார்கள் எனவும் கூறப்படுகிறது.

மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்த பிறகு பா.ஜ.க. முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துவது இது 3-வது முறையாகும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00