கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 72 குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரம் : உயர்நிலை விசாரணைக் குழுவின் அறிக்கை, இன்று தாக்கல்

Aug 22 2017 2:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 72 குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான உயர்நிலை விசாரணைக் குழுவின் அறிக்கை, இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனையில், கடந்த 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை, 72 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கும் லக்னோவைச் சேர்ந்த நிறுவனத்துக்கு, 60 லட்சம் ரூபாய் வரை மருத்துவமனை நிர்வாகம் பாக்கி வைத்ததால், சிலிண்டர் வழங்குவதை அந்த நிறுவனம் நிறுத்தி விட்டதாகக் கூறப்பட்டது. இந்த விஷயத்தில், மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, உத்தரப் பிரதேச மாநில அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் குமார் தலைமையில் உயர்நிலை விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கை, இன்று தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00