விண்வெளித் தொழில்நுட்பத்தில் இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட இந்தியா பரிசீலனை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தகவல்

Aug 22 2017 10:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

விண்வெளித் தொழில்நுட்பத்தில், இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட இந்தியா பரிசீலித்து வருவதாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

விண்வெளித் துறையில், ராக்கெட் இயந்திரங்களில் வேதிப் பொருள்களுக்குப் பதிலாக, மின்னாற்றலைப் பயன்படுத்தும் "எலக்ட்ரிக் புரபல்சன் சிஸ்டம்", ஒளியலைகள் மூலம் விண்வெளியில் இருந்து பூமிக்குத் தகவல்களை அனுப்பும் "ஆப்டிகல் கம்யூனிகேஷன் டெக்னிக்" ஆகிய துறைகளில், இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுவது குறித்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ பரிசீலித்து வருகிறது.

இதுதவிர, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த விண்வெளி அமைப்புகளுடனும் இஸ்ரோ இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில், PSLV ராக்கெட் மூலம், ஒரே தவணையில் 104 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

பிரதமர் திரு. நரேந்திர மோடி, கடந்த மாதம் இஸ்ரேல் சென்றிருந்தபோது, அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையம், இந்திய விண்வெளி ஆய்வு மையம் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00