நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்‍கு அளிக்‍க இயலாது - உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு​திடீர் பல்டி - மருத்துவ மாணவர் சேர்க்‍கை கலந்தாய்வை செப்டம்பர் 4க்‍குள் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

Aug 22 2017 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்‍கு அளிக்‍க முடியாது என்றும், மருத்துவக்‍ கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட வரைவை, மத்திய அரசிடம் தமிழக அரசு சமர்ப்பித்தது. இந்த அவசர சட்டத்துக்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவித்தார். இதனையடுத்து, 3 அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்த நிலையில், அவசர சட்டத்தற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 17-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையிலும், இரு தரப்பினரும் பாதிக்காத வகையிலும் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடத்தப்படும்? என்பது குறித்தும் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்றும் தமிழக அரசின் அவசர சட்ட வரைவை ஏற்க முடியாது என்றும் வாதிட்டார்.

இதனையடுத்து, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்‍கு அளிக்‍க இயலாது என தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மருத்துவ மாணவர் சேர்க்‍கை கலந்தாய்வை செப்டம்பர் 4-ம் தேதிக்‍குள் நடத்த உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00