பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடம் அளிப்பதை அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்புக்கு இந்தியா வரவேற்பு

Aug 23 2017 8:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தான், பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடம் அளிப்பதை அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது.

தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய அதிபர் டிரம்ப் "பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக திகழ்வதாகவும், இனியும் அமெரிக்கா இதனை பொறுத்துக் கொள்ளாது என்றும் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் தங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

மேலும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள அஃப்கனிஸ்தான் நாட்டிற்கு இந்தியா உதவ வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினார்.

இந்நிலையில், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளின் புகலிடமாக உள்ளது என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் விமர்சனத்திற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும், அஃப்கனிஸ்தான் உடனான புதிய கொள்கைகளையும் இந்தியா வரவேற்றுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், அஃப்கன் நாட்டில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி ஏற்படுவதற்கு உதவ இந்திய அரசும் உறுதி பூண்டுள்ளது என்றும், அஃப்கனிஸ்தான் உடனான பாரம்பரிய உறவை இந்தியா மேம்படுத்தும் என்றும் தெரிவித்தார். மேலும், அமெரிக்காவின் கவலைகள் மற்றும் நோக்கங்களை இந்தியாவும் பகிர்ந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00