மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிமின் சொத்துக்களை முடக்கி வைத்து பிரிட்டிஷ் அரசு உத்தரவு

Aug 23 2017 10:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பை குண்டுவெடிப்பு வழக்‍கில் தேடப்பட்டு வரும் முக்‍கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிமின் சொத்துக்‍களை முடக்‍கி வைத்து, பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் அரங்கேற்றிய தொடர் குண்டுவெடிப்புகளில், 257 பேர் கொல்லப்பட்டனர். 700க்‍கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் முக்‍கிய குற்றவாளியான மகாராஷ்டிராவைச் சேர்ந்த தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானுக்‍கு தப்பியோடிவிட்டார். இந்தியா பலமுறை அவரை திருப்பி அனுப்ப வலியுறுத்தியும், தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறிவந்தது. ஆனால், அவருக்‍கு கராச்சியில் 4 இடங்களில் வீடுகளும், சொத்துகளும் இருப்பதாக பிரிட்டிஷ் அரசு தற்போது வெளியிட்டுள்ள சொத்து முடக்‍க அறிக்‍கையில் தெரிவித்துள்ளது. மேலும், அவருக்‍கு அப்துல், ஷேக்‍, இஸ்மாயில், அப்துல் ஹமீத், அப்துல் ரஹ்மான், அசீஸ் உள்ளிட்ட 21 புனைப்பெயர்களும் இருப்பதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. தாவூத் இப்ராஹிமுக்‍கு பிரிட்டனிலும் ஏராளமான சொத்துகள் இருப்பதாகவும், அவை அனைத்தும் முடக்‍கி வைக்‍கப்படுவதாகவும் பிரிட்டிஷ் அரசு தற்போது அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் தாவூத் இப்ராஹிமுக்‍குச் சொந்தமான 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை ஐக்‍கிய அரபு அமீரக அரசு முடக்‍கியது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00