நாட்டின் தேசிய மொழியாக ஹிந்தி மொழியை ஏற்றுக்கொள்ள முடியாது : கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா அறிவிப்பு

Aug 23 2017 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டின் தேசிய மொழியாக ஹிந்தி மொழியை ஏற்றுக்கொள்ள முடியாது என கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.

கட்டாய இந்தி மொழி திணிப்புக்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா, நாட்டில் வழக்கில் உள்ள பிராந்திய மொழிகளை வலியுறுத்துவது, இந்தியாவின் ஒற்றுமைக்கு தடையாக இருக்காது என்றும் இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளில் ஹிந்தியும் ஒன்று என்று தெரிவித்துள்ளார். மேலும் ஹிந்தி மொழியை மக்களிடம் திணிக்கக்கூடாது என்றும், விருப்பப்பட்டவர்கள் அந்த மொழியை கற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிற மாநில வங்கி ஊழியர்கள் 6மாதத்தில் கன்னடம் கற்காவிட்டால் வேலையை விட்டு நீக்கப்படுவார்கள் என்றும் கர்நாடகாவில் ஹிந்தி மொழியை பரப்புவதற்காக எல்லா வங்கி கிளைகளிலும் எப்படி ஹிந்தி மொழி பிரிவுகள் திறக்கப்பட்டதோ அதேபோல் கன்னட மொழிக்கான பிரிவுகளை வங்கிகள் திறக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00